மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
தமிழ் நாவல்கள் படிக்கும் வாசகர்கள் பலரும் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நாவலைப் படிக்கும் போதே நம் கண்முன் கற்பனையில் காட்சிகள் விரியும். அந்த நாவலை சினிமாவாகப் பார்க்க மாட்டோமா, சீரியலாகப் பார்க்க மாட்டோமோ என பலரும் ஏங்கியிருக்கிறார்கள். சீரியலாகவும், அனிமேஷன் தொடராகவும் ஆரம்பிப்பதாகச் சொன்ன பலரும் பின் அது பற்றி வாயே திறக்கவில்லை.
இந்தியத் திரையுலகத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய இயக்குனர்களில் ஒருவரான தமிழ்த் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க முன்வந்து அதை ஏறக்குறைய முடித்தும் விட்டார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், லால், அஷ்வின் கக்குமனு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைக்க இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தாய்லாந்தில் ஆரம்பமாகி நடந்தது. அதன்பின் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்தது.
இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகத்திற்கான குறிப்பிடத்தக்க படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது ஒரு வாள் மட்டும் கொண்ட ஒரே ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அதன்பின் இப்படம் பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை.
இன்று மணிரத்னம் பிறந்தநாள் என்பதால் ஏதாவது அப்டேட் வரும் என்று அவருடைய ரசிகர்களும், 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், எதுவும் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.