மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் தீவிர ரசிகர்களான சில இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இமான்
கிங், மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். அதிகப்படியான மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் உங்கள் வாழ்க்கையில் அமைய தீவிர ரசிகரான எனது வாழ்த்துகள் சார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு. இசைக்கு என்னுடைய இசை பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களது அதி அற்புதமான, ஈடில்லாத, இதற்கு முன் கண்டிராத உங்கள் இசையால் எங்களது வாழ்க்கையை இனிமையாக்கியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மிகவும் அன்பானவருக்கு எனது அன்புகள் சார். உங்களுக்கு எப்போதும் சிறந்த உடல்நலனும், மகிழ்ச்சியும் அமைய வாழ்த்துகள்.
ஷான் ரோல்டன்
இசை அவர், இசை இவர் என்று கோடி நபர்கள் வரலாம். ஆனால், காலமெல்லாம் “இசைஞானி” என நீங்கள் மட்டுமே அறியப்படுவீர்கள். இசை சித்தருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று, தங்கள் இசைக்கு தாங்கள் தான் சொந்தக்காரர்களா என்று இசையமைப்பாளர்களைக் கேட்டால் பதில் வராது. ஆனால், ஒவ்வொரு ஸ்வர அசைவையும் கணிணியின் உதவியும் இல்லாமல், பேனாவால் பேப்பரில் அடக்கி, தியானத்தில் கண்ட ஆன்மாவின் இசையை அனைவரும் அனுபவிக்கச்செய்த மகானே. வாழ்க பல்லாண்டு!