ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் கடந்த மாதம் ரம்ஜான் தினத்தில் வெளியிட்ட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைந்ததால் அதைத் தள்ளி வைத்தார்கள்.
அதன்பின் எப்போது சிங்கிள் வரும் என்று சிம்பு ரசிகர்களும் காத்திருந்தார்கள். கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் டுவிட்டரில் லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யுவன் தான் தாமதம் செய்கிறார் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றியது. அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் யுவன் டுவீட் செய்துள்ளார். அதில், “மாநாடு, சிங்கிள் விரைவில் வெளியாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் டுவீட்டிற்கு 'ஹாட்டின்' எமோஜியைத் தயாரிப்பாளரும், யுவன் டுவீட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவும் ரிடுவீட் செய்துள்ளார்கள்.