நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்தது முதல், தற்போது இரண்டாவது அலையாக உருமாறி அச்சுறுத்தி வரும் வரையில் தனது சொந்த செலவில் பாதிக்கப்பட்ட பலருக்கும் பலவிதமான உதவிகளை வழங்கி வருகிறார் சோனு சூட்.
குறிப்பாக டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்தால் போதும் இவரிடமிருந்து உதவி கிடைத்துவிடும் என்கிற அளவுக்கு விரைந்து உதவி செய்யும் சோனு சூட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் பாலிவுட் நடிகையும் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவருமான ஹூமா குரேஷி, “பிரதமர் ஆவதற்கு மிக பொருத்தமானவர் சோனு சூட்” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சோனு சூட், “நான் அந்த பெருமைக்கு தகுதியானவன் என அவர் நினைத்தால், நான் இன்னும் நிறைய நல்லது செய்ய வேண்டும் என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த பொறுப்பை ஏற்கும் அளவுக்கு எனக்கு வயது ஆகவில்லை.. ராஜீவ் காந்தி நாற்பது வயதில் பிரதமர் ஆனவர் தான் என்றாலும், அது ரொம்பவே சிறப்பான சூழலில் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சாத்தியமாயிற்று.. அந்த அளவுக்கு எனக்கு அரசியலில் அனுபவம் இல்லை” என கூறியுள்ளார்.