தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீபத்தில் சமந்தா நடித்த ‛‛தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ், ஈழத்தமிழர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கு ஆளானது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது குறிப்பாக இதில் நடித்த சமந்தாவும் இந்த கண்டனங்களுக்கு தப்பவில்லை.
இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி சமந்தாவின் நடிப்பை பாராட்டி, சமந்தா ஒரு ராக்ஸ்டார் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் தற்போது தமிழ் உணர்வாளர்களின் கோபம் சின்மயி மீதும் திரும்பியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது சோசியல் மீடியாவில், விரக்தி கலந்த கோபத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார் சின்மயி அதில், ”ஒருத்தரை பாராட்டி பதிவிட்டதற்காக இவ்வளவு துவேஷமா? இவ்வளவு கோபமா..? எனக்கு தெரிந்த ஒரு நபரை, நான் பலமுறை பாராட்டிய ஒரு நபரை பாராட்டுவதற்கு உரிமை இல்லையா? தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சின்மயி.