தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவில் இதுவரை ஒளிபரப்பான வெப் சீரிஸ்களில் அதிக பார்வையாளர்களை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது தி பேமிலி மேன் 2. இதன் முதல் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஜெயவந்த் காசிநாத், திருத்தி திவாரி, சாஜித கஹானி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இது இந்தியாவுக்கு எதிராக திட்டமிடும் காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய கதை.
சமீபத்தில் வெளியான 2வது சீசன் கதையில் இந்தியாவில் ஒரு வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்த இலங்கை தீவிரவாத குழு ஒன்றும், பாகிஸ்தான் உளவு பிரிவும் திட்டமிடுவதான கதை. இந்த சீரிசின் பெரும்பகுதி கதை சென்னையில் நடப்பதால், இதன் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் சீரியலின் இயக்குனர்கள், ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. 2வது சீசன் பற்றிய புரமோசன்களில் பேசி வரும் மனோஜ் பாஜ்பாய் சென்னையில் விஜய் சேதுபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். "நான் விஜய் சேதுபதியை சந்திக்க விரும்பியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம். சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன் அதற்கான சந்திப்புதான் இது" என்று மனோஜ் பாஜ்பாய் இந்த சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார்.
2வது சீசனில் சமந்தா இலங்கையை சேர்ந்த தீவிரவாத பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்து அவர் தான் மைம்கோபியை சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தி பேமிலி மேன் சீரிசின் 3வது சீசனில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாவும், அதற்காக நடந்த சந்திப்புதான் இது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.