துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'த கிரே மேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இன்று(ஜூன் 18) தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதை முன்னிட்டு தனுஷுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக டுவிட்டரில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டிரைலரைப் பகிர்ந்து, “சூப்பர்டா தம்பி, தனுஷுடன் பணி புரிவது உற்சாகமானது, 'ஜகமே தந்திரம்' படத்திற்கு குட்லக்,” என வாழ்த்தியுள்ளார்கள்.
அவர்களின் வாழ்த்திற்கு தனுஷ், “எனக்கு மிகவும் மகிழ்ச்சி சார்” என்றும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “வாவ்... அண்ணன்களுக்கு மிக்க நன்றி, உங்களது வாழ்த்து எங்கள் ஜகமே தந்திரம் குழுவினருக்கு நிறைய அர்த்தம் தரும்” என்றும் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள படத்திற்கு ஹாலிவுட் இயக்குனர்கள் வாழ்த்து சொல்லியிருப்பதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரூசோ பிரதர்ஸின் டுவிட்டர் வாழ்த்து பதிவுக்கு மட்டும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.