துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
திருமணத்திற்கு பிறகு மீனாவிற்கு மலையாள சினிமா தான் கைகொடுத்து வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர், அதன் இரண்டாவது பாகத்திலும் நடித்தார். அதேபோல் அதேபடத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேசுக்கு ஜோடியாக இரண்டு பாகங்களிலும் நடித்தார் மீனா.
திரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற அரசியல் படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ் அடுத்தபடியாக ப்ரோ டாடி என்றொரு படத்தை இயக்குகிறார். இந்தபடத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். காமெடி கதையில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், முரளிகோபி என பலர் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பிருத்விராஜ்.