வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

விஜய், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் மட்டும் போட்டி போடுவதை விட்டு, அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கமும் தாவ வேண்டும் போலிருக்கிறது. பொதுவாக வீடியோக்களின் சாதனைகளுக்கு யு டியுப் பார்வைகள், லைக்குகளும், சமூக வலைத்தள சாதனைகளுக்கு டுவிட்டரை மட்டும் இதுவரையில் குறிப்பிட்டு வந்தார்கள். இனி, இன்ஸ்டாகிராம் சாதனைக்கும் அவர்கள் போட்டி போட்டாக வேண்டும்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் 'லிகர்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த போஸ்டருக்கு இதுவரையில் 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளதாம். இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய படம் ஒன்றின் முதல் பார்வைக்கு 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என படக்குவினர் கொண்டாடுகிறார்கள்.
விஜய்யின் 65வது பட முதல் பார்வை அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21ம் தேதியன்று வெளியாக உள்ளது. 'லிகர்' படத்தின் முதல் பார்வை சாதனையை இந்த விஜய் 65 முதல் பார்வை முறியடிக்கிறதா எனப் பார்ப்போம்.
'லிகர்' படத்தை பூரிஜெகன்னாத் இயக்க விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.