செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், நிவின் பாலியுடன் படவெட்டு, காளிதாசுடன் ஜேக் அண்ட் ஜில் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மஞ்சுவாரியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றன. கடந்த மார்ச் மாதம் அவர் வெளியிட்ட படத்தில் 42 வயதான மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக இருந்தார். இன்றைய இளம் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. வொண்டர் வுமன் படத்தில் வருவது போல் வேட்டை நாயுடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த புகைப்படம், பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.