‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சாமி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவத்து குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைதான வழிப்பறி கொள்ளையர்கள் போல காண்பிக்கப்பட்டிருந்தனர். அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.