தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில நாட்களுக்கு முன் தசாவதாரம் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் கமல். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பிஹெச்டி என்றால், உங்களுடைய மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி மாதிரி.. அந்தப்பட உருவாக்கம் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என சோஷியல் மீடியா மூலமாக கோரிக்கை வைத்தார் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதற்கு கமலும் நேரம் வரும்போது அதுபற்றி பகிர்கிறேன் என கூறியிருந்தார்.
தற்போது மூத்த இயக்குனர்களான கே.பாலச்சந்தர், சிங்கிதம் சீனிவாசராவ், அனந்து, பாலுமகேந்திரா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள கமல், அவர்கள் தனக்கு எப்படி கற்றுத்தந்தார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
அதேசமயம் அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “என்னிடம் கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்ரனுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா புத்திரன்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அவர்களை போல என்னால் கற்றுக் கொடுக்க முடியாது.. காரணம் நான் ஆசரியர் அல்ல.. அந்த அளவுக்கு ஒரு தாயைப்போல என்னால் தியாகம் செய்ய முடியாது. நான் இப்போதும் ஒரு மாணவன் தான். அதுவும் சுயநலமிக்க மாணவன்” என்று கூறியுள்ளார்.
அதாவது தனது படங்களின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை மட்டுமே தன்னால் கூறமுடியும் என்றும், அவற்றை படமாக்கிய விதம் பற்றி தன்னால் கற்றுக் கொடுக்க முடியாது என்பதையும் அவரது பாணியில் 'தெளிவாக' விளக்கியுள்ளார் கமல். இந்த விளக்கத்துக்கு “ஒரு டன் நன்றிகள் சார்” என நன்றி கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்