உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள மலையாள நடிகர் பஹத் பாசில், வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களில் நடித்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். அதேபோல கமலுடன் இணைந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் பஹத், கமலிடம் கேட்பதற்கென ஒரு கேள்வியை வைத்துள்ளாராம்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கமலின் மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா ஆகிய படங்களை பார்த்து வியந்துள்ளேன். அவரை நேரில் பார்க்கும்போது இதயெல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிந்தது என்கிற ஒரே ஒரு கேள்வியை மட்டும் அவரிடம் கேட்க போகிறேன்” என கூறியுள்ளார் பஹத் பாசில்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமல் தனது தசாவதாரம் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டபோது, அவரிடம் 'மைக்கேல் மதன காமராஜன்' படம் உருவான விதம் பற்றி சொல்லுங்கள் என மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.