அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா |
கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் தயாரிக்கும் 5வது படத்தில் சசிகுமார் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பிக்பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைள் தேர்வும் இன்னும் முடியவில்லை. டி.இமான் இசை அமைக்கிறார். புதுமுகம் ஹேம்ந்த் குமார் இயக்குகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.
கிராம பின்னணி கொண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சசிகுமார் தற்போது ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன் பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து முடித்துள்ளார். அவைகள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.