2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி |

சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரீடம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். சசிகுமாரின் முந்தைய படமான டூரிஸ்ட் பேமிலியை போலவே இதுவும் இலங்கை தமிழர்களின் பின்னணியை கொண்டு அதே சமயம் வேறு விதமான கதை கோணத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார், “அடுத்தடுத்து இலங்கை தமிழர்களின் கதையிலேயே நடிக்கிறீர்களே, நீங்கள் இலங்கை தமிழருக்கு ஆதரவானவரா என்று கேட்கிறார்கள். நான் மொத்தத்தில் தமிழர்களுக்கு ஆதரவானவன். இன்னும் சொல்லப்போனால் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு முன்னதாகவே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. சில காரணங்களால் தாமதமாகி இப்போது வெளியாகிறது. இந்த படம் இலங்கை தமிழர்களின் கதை என்றாலும் இது வேறு விதமாக இருக்கும். இது ஜெயிலில் இருந்து விடுதலைக்காக தப்பிக்க கைதிகள் சிலர் நடத்தும் போராட்டமாக உருவாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்த்துவிட்டு அது போல இருக்கும் என்று நினைத்து இந்த படத்திற்கு வர வேண்டாம். பொதுவாகவே நான் அனைவரிடமும் சொல்வது படம் வெளியாவதற்கு முன்பே உங்களுடைய கதை எந்த ஜானர் என்று சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அவர்களாக படத்தைப் பற்றி ஒன்று நினைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது சில நேரம் அது அவர்களுக்கு ஏமாற்றம் தந்து விடும். அது படத்தின் வெற்றியையும் பாதித்துவிடும்” என்று பேசினார்.