படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களில் 75 சதவிகிதம் பேர் புகைபிடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால், புகைப்பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். மேலும் தனது ரசிகர்கள் புகைப் பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகைப் பிடிப்பதின் தீமைகளைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90களின் காலகட்டத்தில் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்தக் காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது.
தற்பொழுது 2021ல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகைப் பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன். கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.
எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மைச் சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்லும் நான் நம்புகிறேன்.
இவ்வாறு அல்லு அர்ஜுன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்க அட்வைஸ் இருக்கட்டும் பாஸ், உங்கள் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நீங்க உறுதி எடுங்க பாஸ் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.