செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தற்போது ஹிந்தியில் குட்பை, மேடே, பிரமாஸ்திரா உள்பட பல படங்களில் நடித்து வரும் அமிதாப்பச்சன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடித்து வந்த அமிதாப்பச்சன் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஓரளவுக்கு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் பிறகு படமாக உள்ளது.
தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாம். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமிதாப்பச்சன், சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடித்தவர், நாக் அஸ்வின் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபாஸின் குருநாதர் வேடத்தில் நடிக்கிறாராம்.