செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சினிமாவில் முன்பெல்லாம் தியேட்டர்களில் அடுத்தடுத்து ஒரே நடிகரின் படம் வெளியாகி ஹிட் அடித்தால் 'பேக் டூ பேக் சூப்பர் ஹிட்' என அந்த நடிகரின் ரசிகர்கள் அந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக தியேட்டர்கள், முதல் நாள் முதல் காட்சி அதிலும் அதிகாலை காட்சி, ரசிகர்கள் கூட்டம் என சினிமாவைப் பார்க்க முடியவில்லை.
தியேட்டர் கொண்டாட்டம் என்ற அந்த இடத்தை ஓடிடி தளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றன. முதல் நாள் முதல் காட்சி என்பது ஓடிடியில் நடு இரவு காட்சியாகவும், ரசிகர்கள் கூட்டம் குடும்பத்தினரின் கூட்டமாகவும் மாறிவிட்டது.
இந்த வருடம் ஓடிடி தளங்களில் தனது அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்றுள்ளவர் ஆர்யா. அவர் நடித்த 'டெடி' இந்த ஆண்டு மார்ச் மாதம் ஹாட்ஸ்டார் தளத்திலும், அடுத்த வெளியீடான 'சார்பட்டா பரம்பரை' கடந்த வாரம் அமேசான் தளத்திலும் வெளியானது.
அவரைப் போலவே அடுத்தடுத்த ஓடிடி வெளியீட்டில் இடம் பெற உள்ளவர் நயன்தாரா. அவர் நடித்த 'மூக்குத்தி அம்மன்' கடந்த வருட தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. அவரது அடுத்த படமான 'நெற்றிக்கண்' அடுத்த மாதம் 13ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
ஆர்யா, நயன்தாரா போலவே சூர்யாவும் 'பேக் டூ பேக்' ஓடிடி வெளியீட்டில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. கடந்த வருடம் அவரது 'சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து அவர் நடித்துள்ள 'ஜெய் பீம்' ஓடிடி வெளியீடு என்றே தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம்.