நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் |
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர், தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.