தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாகி, திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து டெடி படத்திலும் இருவரும் நடித்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த சமயத்தில் தான் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இன்று தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சாயிஷா. அதையடுத்து அவருக்கு திரையுலக நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆர்யாவும் தனது டுவிட்டரில் சாயிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‛‛வாழ்த்துக்கள் என் மனைவியே, நீ என் மீது வைத்திருக்கும் சிறந்த அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகட்டும். நீ மிகவும் அன்பான பெண். என் வாழ்க்கையில் நீ கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்'' என்று நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் ஆர்யா.