துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பயிற்சி கொடுக்க கராத்தே நுணுக்களை கற்கிறார் ஆண்ட்ரியா. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ஆண்ட்ரியா அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.