மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார். இவற்றில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.