ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. படத்தின் கதாநாயகியர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.
ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'சித்திரம் பேசுதடி' நரேன் இணைந்துள்ளார். இது குறித்து நரேன், “ஒரு ரசிகனின் கனவு நனவாகிறது. நான் நடிகராக யார் உத்வேகமாக இருந்தாரோ அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். இயக்குனர் லோகேஷ், ராஜ் கமல் பிலிம்ஸ் ஆகியோருக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நரேன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.