துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஹீரோவை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் படங்களை தவிர்த்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியின் பயோபிக்கான மகாநடி படத்துக்கு பிறகு பெண்குயின், மிஸ் இந்தியா என அடுத்தடுத்து நாயகிகளுக்கான படங்களிலேயே நடித்தார். தற்போது குட் லக் சகி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படமான மிமி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் ரீமேக் ஆகிறது. கடந்த மாதம் வெளியான இந்த படத்தில் கிரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி, மனோஜ் பவ்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். லக்ஷ்மண் உதேகர் இயக்கி இருந்தார்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒரு இளம் பெண், பணத்துக்காக வாடகை தாயாக மாறுகிறாள். இன்னொருவருடைய குழந்தையை அவள் சுமக்கிறாள். இந்த நிலையில் வாடகை தாயாக நிர்ணயித்தவர்கள் திடீரென குழந்தை வேண்டாம் கருவை கலைத்து விட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதற்கு மறுக்கும் அந்த பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காமெடி கலந்து சொல்லும் படம்.
இதில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணியாக நடிக்கிறார். ஏற்கெனவே அவர் பெண்குயின் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருந்தது குறிப்பிடத்க்கது.