அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் ஆரம்பமாக உள்ளது. சமீபத்தில் இதற்கான இந்த நிகழ்ச்சிக்கான புரொமோஷன் ஷூட்டில் கமல் பங்கேற்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி துவங்குவதற்காக அறிவிப்புக்கு ஒரு டீசரை இன்று வெளியிட்டனர். அதில் சிரித்தபடியே ஆரம்பிக்கலாமா? என கமல் கேட்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்திற்கு ஆரம்பத்தில் ஒரு டீசர் வெளியிட்டனர். அதில் ஆரம்பிக்கலாங்களா என கமல் கேட்பார். அதே பாணியில் இந்த பிக்பாஸ் சீசனுக்கான 5 டீசரை வெளியிட்டுள்ளனர். அதோடு பிக்பாஸ் 5க்கான லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. கமலின் பிக்பாஸ் 5 தொடர்பான இந்த டீசர் வைரலாகின.
கடந்த வருடம் சீசன் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது. அது போலவே இந்த வருட சீசனும் அக்டோபர் மாதம் தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.