கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சீசனுக்கு சீசன் வித்தியாசமான கான்செப்டில் புரோமோக்களை வடிவமைக்கும் பிக்பாஸ் குழு இந்த முறை கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாவை நேர்த்தியாக படமாக்கி பிக்பாஸ் 5-க்கான புரோமோவை வெளியிட்டுள்ளது.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலேயே மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று நம்பர் 1 நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் தான். அடுத்தவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள நினைக்கும் ஆர்வமே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. இதுவரை வெளியான 4 சீசன்கள் வெற்றி பெற்ற நிலையில் ஐந்தாவது சீசன் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்தே காணப்படுகிறது.
தற்போது ஐந்தாவது சீசனுக்கான அறிவிப்பும் புரோமோவும் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிக்பாஸ் சீசன் 5-ன் புதிய புரோமோ முற்றிலும் ப்ரஸ்ஸான ஐடியாவாக இருப்பதுடன் எதிர்பார்ப்பையும் எகிர வைத்துள்ளது. அந்த புரோமோவில் கல்யாண வீட்டில் காலை முதல் மாலை வரை நடக்கும் நிகழ்வுகளை எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது போல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்யாண வீட்டில் உறவினர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை காண்பித்து ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்டாக்கள் இருக்கும் போது.. என கமல்ஹாசன் பேசியிருக்கும் டயலாக் பிக்பாஸ் வீட்டை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.