தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அருண் விஜய் நடித்த குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் அவரை வைத்து இயக்கி வரும் படம் பார்டர். ரெஜினா ஹீரோயின். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் பார்டர் படத்தை வெளியிட தடை கேட்டு டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பார்டர் என்ற தலைப்பில் நான் படம் ஒன்றை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தின் தலைப்பை ஏற்கனவே முறைப்படி பதிவு செய்துள்ளேன். ஆனால் அருண் விஜய்யின் நடிப்பில் தற்போது பார்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த படம் வெளியானால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே அருண் விஜய்யின் பார்டர் படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்.என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பார்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, டைட்டிலை பதிவு செய்த தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.