வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இசை அமைக்கும் படங்களை விட ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் அதிகம். அது போலவே கவுதம் மேனன் இயக்கும் படங்களை விட அவர் முக்கிய ரோல்களில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இந்த இருவரும் இணைந்து புதுக் கூட்டணி அமைத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் இப்படத்தில் கவுதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். வி கிரேஷன்ஸ் உடன் இணைந்து டி.ஜி பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‛செல்பி' என பெயரிட்டுள்ளனர். இன்ஜினியரிங் கல்லூரி பின்னணியை கொண்ட கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.