நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் வலிமை. இப்படத்தின் ஆக்சன் காட்சிக்காக பல மாதங்களாக காத்திருந்தவர்கள் சமீபத்தில் ரஷ்யா சென்று படமாக்கி விட்டு திரும்பினர். அதையடுத்து இறுதிக்கட்ட பணிகளும் நடந்து முடியும் தருவாயில் உள்ளது.
மேலும், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் வெளியான நிலையில் வலிமை டீசர் எப்போது? என்கிற எதிர்பார்ப்புகளும் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது டுவிட்டரில், தல தீபாவளியாக வலிமை வர உள்ளது. வலிமை டீசரும் விரைவில் வெளியாகப்போகிறது என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் வலிமை டீசர் வெளியாகப்போவதாக சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அதோடு வலிமை டீசர் என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டிங் செய்யப்பட்டு வருகிறது.