துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படம்அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அக்டோபர் 15-ந்தேதி இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் விஜய்க்கு 66ஆவது படமாகும்.
மேலும், இந்த படத்தின் கதையை தான் மகேஷ்பாபு விற்காக உருவாக்கியதாகவும், அந்த கதையை கேட்ட அவர், தன்னைவிட இது விஜய்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்ததாக வம்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடக்கும்போது மகேஷ்பாபுவும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.