நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலும், மிஷ்கினும் இணைந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறி வருகிறார் விஷால்.
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.