'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
நடிகை சமந்தா தனது காதல் கணவர் நடிகர் நாகசைதன்யாவுடன் திருமண முறிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டது தான் தற்போது தென்னிந்திய திரை உலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இந்த திருமண முறிவுக்கு யார் பக்கம் தவறு இருக்கிறது என்று ஒரு சிலர் காரணங்களை அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சிலர் சமந்தாவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சமந்தா நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தும் அவரும் காதலித்ததாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் விழாக்களில் கூட ஒன்றாக வந்து கலந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தன. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற அளவுக்கு அப்போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதன்பிறகுதான் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த சமந்தா அவருடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக சமந்தாவும் நாக சைதன்யாவும் அறிவித்துள்ள நிலையில், சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டிவீட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் செழிப்பாக இருக்க மாட்டார்கள் என்பது சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று" என கூறியுள்ளார். இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை சித்தார்த் வெளியிட்டுள்ளதால், நிச்சயமாக சமந்தாவை மனதில் வைத்துத்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.