துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
வானத்தைப் போல சீரியல் டி.ஆர்.பியிலும் நல்ல தான் பெர்பார்ம் செய்து வருகிறது. அதில் நடித்து வரும் நடிகர்களுக்கும் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த வார எபிசோடுடன் அதில் கதாநாயகி துளிசியாக நடித்து வந்த ஸ்வேதா சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து புது துளசியாக தெலுங்கு நடிகை மான்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் தமன் குமாரும் சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வந்துள்ளது. அதற்கேற்றார் போல் கடந்த சில எபிசோடுகளாக சின்ராசு கதாபாத்திரம் காணமல் போய்விட்டதாக காட்டப்படுகிறது. மேலும், மான்யாவின் அறிமுக ப்ரோமோவிலும் எங்கள் முகங்கள் மாறாலாம் ஆனால் பாசம் மாறது என்ற டயலாக் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமன் குமாரும் சீரியலை விட்டு விலகிவிட்டதாக சீரியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை, எனினும் தமன் குமார் நடித்த இரண்டு படங்கள் விரைவில் வெளியாகவுள்ளதும், அவர் சினிமாவில் நீண்ட காலமாகவே ஹீரோவாக நடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.