போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணம் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரல் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் வனிதாவின் பதிவும் ரவீந்தரை சீண்டி பழிவாங்கும் வகையில் இருப்பதாக பலரும் பேசி வந்தனர். காரணம், வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்த போது சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான விமர்சனங்கள் பரவலாக எழுந்தது. அப்போது ரவீந்தரும் தன் பங்கிற்கு வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.
தற்போது ரவீந்தர் திருமணமும் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், வனிதா 'கர்மா ஒரு பூமராங்' என பதிவிட்டு ரவீந்தருக்கு பதிலடி கொடுத்தார். அந்த டுவீட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்மையில் அது குறித்த விளக்கத்தை வனிதா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வனிதா அந்த பேட்டியில், 'உண்மையில் நான் மனதார ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அந்த டுவீட் நான் எதார்த்தமாக போட்டது. கர்மா யாரையும் சும்மாவிடாது என்பதை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன். அவர்களை மட்டும் குறிப்பிட்டு நான் போடவில்லை. என் வாழ்வில் அப்போது நான்கைந்து விஷயங்கள் நடந்தன. அதனால் அந்த பதிவை போட்டேன். ஆனால், அது அவர்களுக்கும் பொருந்தும். ரவீந்தரின் மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும். என்னிடம் வேண்டாம்' என கூறியுள்ளார்.