தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி, தனது முதல் கணவரின் மரணத்திற்கு பின் மீடியா வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். அவரை தேற்றி மீண்டும் சின்னத்திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதன்பின் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பாவ்னி ரெட்டிக்கு தற்போது இரட்டிப்பு மடங்காக ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களது பாசமும், ஆதரவும் பாவ்னி ரெட்டியை மீண்டும் தனது இன்னிங்சை விட்ட இடத்திலிருந்து துவங்கியிருக்கிறார்.
இதற்கிடையில் பாவ்னி - அமீரின் காதல் கதைகளும் சோஷியல் மீடியாவில் அதிக கவனம் ஈர்த்து வந்தது. பிக்பாஸ் வீட்டில் புரோபோஸ் செய்த அமீருக்கு, பாவ்னி பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 வில் ஓகே சொன்னார். இதனையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் தொலைக்காட்சி நிலையில் கலந்து கொண்ட பாவ்னியிடம், 'கடந்த கால வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை திரும்ப பெற விரும்புகிறீர்கள்' என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த பாவ்னி, எனது கணவர் திரும்ப வர வேண்டும். அவர் இப்போது உயிருடன் இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும், தனது இந்த பதிலால் அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் அமீருடன் தற்போது மகிழ்ச்சியான சூழலில் இருக்கிறேன். அமீர் என் வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயம் என்று கூறியுள்ளார். பாவ்னியின் இந்த பதில் பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. அதேசமயம் பாவ்னி தனது கணவர் மீது வைத்திருக்கும் காதலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.