2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தீபாவளியை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் சேனல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது. அதில் முக்கியமான சில நிகழ்ச்சிகள் வருமாறு:
நாளை காலை 11 மணிக்கு பீம்லா நாயக் படம் ஒளிபரப்பாகிறது. பவன் கல்யாண், ராணா டகுபதி நடித்துள்ள படம் இது. ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது தமிழில் ஒளிபரப்பாகிறது. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துணை ஆய்வாளர் பீம்லா நாயக் (பவன் கல்யாண்) மற்றும் ராணுவத்தில் ஹவில்தாராக முன்பு பணியாற்றிய டேனியல் சேகர் (ராணா டகுபதி) ஆகியோருக்கு இடையிலான மோதலையும், எதிர்ப்பு உணர்வையும் சுற்றி பிண்ணப்பட்ட கதை.
24ம் தேதி காலை தீபாவளி தினத்தன்று 9 மணிக்கு பேரானந்தம் தருவது காதலா, திருமணமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. 10 மணிக்கு நம்ம வீட்டு தீபாவளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வள்ளி திருமணம், மந்திரப் புன்னகை, ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா, சில்லுனு ஒரு காதல், கண்ட நாள் முதல் மற்றும் பச்சகிளி ஆகியவற்றின் நடிகர் நடிகையர் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.
மதியம் 12.00 மணிக்கு இந்த சிறப்பு சமையல் நிகழ்ச்சியான கலக்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்திய, இத்தாலிய மற்றும் காண்டினெண்டல் சமையல் முறையிலான பல்வேறு உணவுகளை தயாரிப்பது பற்றி இது சுவைபட விளக்கவிருக்கிறது. மாலை 4 மணிக்கு அருள்நிதி, மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் நடித்த தேஜாவு படம் ஒளிபரப்பாகிறது. ஒரு எழுத்தாளர் எழுதும் கதையில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பது மாதிரியா 'ரைம் திரில்லர் கதை.
மாலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் ஒளிபரப்பாகிறது. ஆத்மிகா ஹீராயின். ஐஏஎஸ் படிக்கும் கனவுடன் சென்னை வரும் ஒருவன் தமிழக முதல்வராகும் கதை. ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.