தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் சீசன் 6ல் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கலந்து கொண்டவர்களில் டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் என்ற பிரிவில் ஜி.பி.முத்துவும், தனலெட்சுமியும் உள்ளே நுழைந்தனர். இவர்களை தவிர திருநங்கையான ஷிவினுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது வரை தனலெட்சுமியும் தன்னை சாதாரண பொது ஜனத்திலிருந்து கலந்து கொண்ட பெண்ணாகவே காண்பித்து வருகிறார். கதை சொல்லும் டாஸ்கிலும் அதையே தான் சொல்லியிருந்தார். இந்நிலையில், கடந்தவாரம் தனலெட்சுமியின் நண்பர்கள் அவர் சொல்லிய பொய்களை அம்பலப்படுத்தி பேட்டி அளித்திருந்தனர். அதன்பிறகு அவர் நடித்த ஷார்ட் பிலிம்ஸ், ஆல்பம் சாங்க்ஸ், திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் வெளியானது. தற்போது மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தனலெட்சுமி விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் சம்பத்துடன் சேர்ந்தே 'வத்திக்குச்சி' என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு பொதுமக்களில் இருந்து வந்தவர் என்றே தனலெட்சுமி தொடர்ந்து சொல்லி வருகிறார்.
இதை பார்த்து கடுப்பான நேயர்கள் 'தனலெட்சுமி தன்னை பற்றி சொல்வதெல்லாம் பொய் என்பது அவரை நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்த பிக்பாஸுக்கும் நிகழ்ச்சி குழுவினருக்கு தெரியாதா?, தனலெட்சுமியுடன் சேர்ந்து பிக்பாஸும் பொய் சொல்கிறாரா?' என பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ இத்தனை ப்ராஜெக்ட்கள் நடித்தும் வெளியில் தெரியாத தனலெட்சுமியை இன்று திட்டு வாங்க வைத்தே பிரபலமாக்கிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.