தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் தமிழ் சீரியல் உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தார் ராதிகா சரத்குமார். ராடன் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து நடித்த சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடைசியாக சித்தி-2 சீரியலை தயாரித்த வந்த ராடன் நிறுவனம் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்தது. ராதிகா தற்போது 'பொன்னி கேர் ஆப் வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இருப்பினும் ராதிகாவின் பழைய சீரியல்களுக்கு கிடைத்த பெயர் போல் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ராதிகா புதிதாக தயாரிக்கவுள்ள சீரியலில் 'பூவே பூச்சுடவா', 'அபிடெய்லர்' தொடர்களின் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் மற்றும் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' 1&2-வில் நடித்த அஸ்வினி ஆகியோர் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய ரோலில் நடிப்பதுடன் ராதிகாவும் நடிக்கிறார். இந்த சீரியலானது, தமிழின் சூப்பர்ஹிட் குடும்ப படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் தழுவலாக 'கிழக்கு வாசல்' என்ற டைட்டிலுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் இந்த புதிய சீரியல் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.