விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

வீஜேவான மணிமேகலை உதவி நடன இயக்குநராக பணிபுரிந்து வந்த ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். மணிமேகலை வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இப்போது வரை வாழ்வின் ஏற்றதாழ்வு, இன்பதுன்பங்களை ஒன்றாக சந்தித்தனர். இன்றைய நாளில் வீடு, கார் என சமூக அந்தஸ்த்திலும் நல்ல நிலையில் உள்ளனர்.
மணிமேகலை - ஹுசைன் காதல் எப்படி மலர்ந்தது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பல காலங்களாக எழுந்து வருகிறது. தற்போது இதற்கு விடையளித்துள்ள மணிமேகலை, 'மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில ஆடலுடன் பாடலை கேட்டு என்கிற ரீமிக்ஸ் பாடலுக்கு லாரன்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து ஹுசைன் சில ஸ்டெப்ஸ் ஆடியிருப்பார். அந்த பாடல் வரும்போதெல்லாம் இவர் டான்ஸ் பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கும்.

தொடர்ந்து பாத்துட்டே இருந்ததால எப்படியாச்சும் இவர பாரட்டனும்னு ஆசை வந்துச்சு. சிலர் பேர்கிட்ட நம்பர் கேட்டேன். அப்போதான் இவர் முஸ்லீம்னு தெரிஞ்சுது. போன் பண்ணலாமா வேண்டாமான்னு ஒரு மணி நேரம் யோசிச்சேன். அப்புறம் நைட் 11 மணிக்கு கால் பண்ணேன். அப்பவே இவர் பெயரை என் போன்ல கிரஷ்ன்னு சேவ் பண்ணிட்டேன்' என்று ஹுசைன் மீது காதல் மலர்ந்த தருணத்தை மணிமேகலை கூறியுள்ளார்.