துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்த மணிமேகலை தொடந்து 4 சீசன்களிலும் களமிறங்கினார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் 4வது சீசனிலிருந்து அண்மையில் மணிமேகலை திடீரென விலகினார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பலவாறாக தகவல்கள் பரவி வந்த நிலையில், சிலர் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கர்ப்பமாக இருக்கீங்களா? என மணிமேகலையிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய மணிமேகலை, 'இல்லை. அது வெறும் வதந்தி தான். நான் கர்ப்பமாக இல்லை. எந்த ஒரு நியூஸா இருந்தாலும் அத ஏதோ ஒரு நாலு யூ-டியூப் சேனல் உங்களுக்கு சொல்லி தெரியுற மாதிரி இருக்காது. நானே தான் சொல்வேன்' என தெரிவித்துள்ளார்.