தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாக கொண்டே செல்கிறது. விஷ்ணுகாந்த் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் லைவ்வில் வந்து சம்யுக்தா பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டே வர, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வகையில் இதுநாள் வரை வெளியிடாமல் இருந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார்.
விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பே சம்யுக்தா தன்னுடன் 'நிறைமாத நிலவே' தொடரில் நடித்த ஆர்.ஜே.ரவியை காதலித்துள்ளார். அதன்பின் ஆர்.ஜே.ரவி தன்னிடம் அத்துமீறியதாக புகார் கூறி பிரிந்துள்ளார். அதன்பின் விஷ்ணுகாந்தை காதலிப்பதாக அறிவித்த சம்யுக்தா தொடர்ந்து ரவியுடன் ஆறுமாதமாக பேசியுள்ளார். அதிலும், ரவியை மறக்கமுடியவில்லை என்றும் அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
விஷ்ணுகாந்த தனது எக்ஸ் காதல் குறித்து சம்யுக்தாவிடம் மனம் திறந்து கூறிவிட்ட நிலையிலும், ரவியுடனான தனது உறவை சம்யுக்தா மறைத்து வைத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி சம்யுக்தாவிடம் பேசிய நபர், விஷ்ணுகாந்திற்கு சம்யுக்தா உண்மையாக இல்லை என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில், இதுநாள் வரை உடனுக்குடன் லைவ் வந்த சம்யுக்தா தற்போது எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.