துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து வந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சம்யுக்தாவிற்கும், ஆர்.ஜே.ரவிக்கும் இருந்த உறவை ஆடியோவை ரிலீஸ் செய்து அம்பலடுத்தினார் விஷ்ணுகாந்த். இதனைதொடர்ந்து ஆர்.ஜே.ரவி ஒரு அப்யூஸர் என்றும், அதனால் தான் அவரைவிட்டு பிரிந்ததாகவும் சம்யுக்தா கூறினார். இதனால், பலரும் ஆர்.ஜே.ரவியை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.ரவி நீண்ட ஒரு கடிதத்தை தனது சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டிருந்தார்.
அதில், 'நான் எதையும் விளக்கபோவதில்லை. என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் என்னுடன் நடித்த சக நடிகைகளை பாதுகாப்பாக தான் உணர செய்துள்ளேன். என் பெற்றோர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேல் நான் விளக்கம் சொல்ல வேண்டுமா? ' என்று பதிவில் கூறியுள்ளார்.
இந்த பதிவை சக நடிகையான வெண்பா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து 'வீ ஸ்டேண்ட் வித் ரவி', 'லெட் கர்மா ஸ்பீக்' என ஆர்.ஜே.ரவிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், பலரும் ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவுக்கும் ஆர்.ஜே.ரவியின் இந்த பதிவுக்கும் தற்போது வரை சம்யுக்தா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, சம்யுக்தா தான் செய்யும் தப்பை மறைக்க தன்னிடம் உறவிலிருந்த ஆண்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்துகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.