2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

வீஜே பார்வதி குறித்து சில நெட்டீசன்கள் தொடர்ந்து மோசமான கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர். அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்து வரும் பார்வதி, ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னை பற்றி வந்த நெகட்டிவான கமெண்டுகளை வைத்தே புதிதாக ஒரு கண்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவர் வீஜே பார்வதியை தமிழ்நாட்டு மியா கலிபா என்று ஒப்பிடுவதை குறிப்பிட்டு, 'அவர் நல்லவர் நீங்கள் அவரை போல் இமிட்டேட் செய்து உங்களை நீங்களே புரோமோட் செய்து கொள்கிறீர்கள்' என்று சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த பார்வதி, 'நான் எப்படா என்னைய மியா கலிபான்னு சொன்னேன். நான் எப்ப அவங்க மாதிரி இமிட்டேட் பண்ணேன். நீங்களா தானடா பேர் வைக்கிறீங்க' என்று கலாய்த்துள்ளார். அதேபோல் பார்வதியின் ஆடைகுறித்தும் அவரை பாடிஷேமிங் செய்தும் மோசமான வார்த்தைகளால் திட்டியவர்களின் கமெண்டுகளை படித்து காண்பித்து, 'திட்டுவதாக இருந்தால் உங்களை நீங்களே திட்டிக்கொள்ளுங்கள். ஏன் பெண்களை திட்டுகிறீர்கள். நான் என் உழைப்பில் வாங்கிய உடையை அணிகிறேன். அது என் இஷ்டம். நீங்களா எனக்கு டிரெஸ் வாங்கி தருகிறீர்கள்?' என கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.