வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா, அதன்பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து சில படங்கள் மற்றும் சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் நரேனுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட திருமண போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் ரேஷ்மா. ஆனால் ஏற்கனவே இதே புகைப்படங்களை நடிகர் நரேனும் முன்பு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதே புகைப்படத்தை இப்போது ரேஷ்மாவும் பதிவு செய்ததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் வாழ்த்து சொல்லத் தொடங்கினார்கள். இந்த நிலையில் ஒரு வீடியோ மூலம் அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார் ரேஷ்மா. அதில், அந்த திருமண போட்டோசூட் உண்மையானது அல்ல. மேகசின் ஒன்றின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இந்த போட்டோசூட் குறித்து வெளியான வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது.