வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கலர்ஸ் தமிழ் சேனல் இந்த வாரத்தை போலீஸ் வாரமாக அறிவித்து திங்கள் முதல் வியாழன் வரை போலீஸ் படங்களை ஒளிபரப்புகிறது. இந்த படங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இன்று திங்கள் கிழமை (10ம் தேதி) அருள்நிதி நடித்த 'தேஜாவு' படம் ஒளிபரப்பாகிறது. இதனை அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கி இருந்தார். ஸ்மிருதி வெங்கட், அச்யுத் குமார், மதுபாலா நடித்திருந்தார்கள். இதில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
நாளை 'ரைட்டர்' படம் ஒளிபரப்பாகிறது. இதில் சமுத்திரகனி போலீஸ் ரைட்டராக நடித்திருந்தார். அவர் மனைவியாக இனியா நடித்திருந்தார். பிராங்கின் ஜேக்கப் இயக்கி இருந்தார். இது ஒரு ரைட்டரின் வாழ்க்கையை சொன்ன படம். நாளை மறுநாள் 'சேசிங்' படம் ஒளிபரப்பாகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருடன் சோனா, சூப்பர் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கே.வீரகுமார் இயக்க இருந்தார். கடைசி படமாக வியாழக்கிழமை 'ட்ரிக்கர்' படம் ஒளிபரப்பாகிறது. அதர்வா போலீசாக நடித்திருந்த இந்த படத்தை சாம் ஆன்டன் இயக்கி இருந்தார். தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.