துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதார்த்தமான கதை மாந்தர்களுடன் முற்போக்கான கருத்துகளை பொழுதுபோக்காய் செல்லும் இந்த சீரியலுக்கு குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைய தலைமுறையினர் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த தொடரின் கதாநாயகன் சக்திவேல் (சபரி பிரசாந்த்), கதாநாயகி ஜனனி (மதுமிதா) ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்நீச்சல் தொடர் மேலும் மேலும் வெற்றியடைய ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.