தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ் பெற்ற அமீர் - பாவ்னி ஜோடி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், திருமணம் செய்யாமலேயே திருமணமான ஜோடி போல ஒன்றாக டூர் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என இருவரும் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்போது ஜோடியாக ஒரு காரை வாங்கி போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமாகவே திருமணத்தையும் முடிக்க சொல்லி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.