தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மூலமாக பிரபலங்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டி வருகிறது.
கடந்த ஆண்டிற்கான விருது விழா நிகழ்ச்சி இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான விருது விழா நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளது. முதல் பாகம் வரும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ரெட் கார்பெட் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக உள்ளது. அதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது. மேலும் தீபாவளி தினத்தின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க கார்த்தி, விஷால், ஆர்யா, ஜெய், வெற்றிமாறன், கலைப்புலி தாணு, பொன்ராம், அருண் விஜய், பார்த்திபன், ஜெயம் ரவி என எக்கச்சக்கமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பேவரைட் விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டுகளின் முலமே தேர்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தும், மிஸ்டுகள் கால், ஆன் லைன் ( Zee 5 ) என பல்வேறு வழிமுறைகளில் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான ஓட்டுக்களின் மூலமாகவே வெற்றியாளரை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பேவரைட் பிரபலங்களின் திறமைகளை கொண்டாடும் ஜீ குடும்ப விருதுகள் விழாவை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.