தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல சின்னத்திரை நடிகர் ராகுல் ரவி. மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான் படங்களில் நடித்திருக்கும் இவர், பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். 'பொன்னம்பிளி' என்ற மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்த அவர், தமிழில் 'நந்தினி' சீரியல் மூலம் அறிமுகமானார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, 'சாக்லேட்' என்ற தொடரிலும் இவர் நாயகனாக நடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக இத்தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 'கண்ணான கண்ணே' என்ற தொடரில் நடித்தார்.
கொரோனா காலத்தில் தான் காதலித்து வந்த லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ராகுல் ரவி முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த முன் ஜாமீனுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராகுல் ரவி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.