நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' தொடர் டி.ஆர்.பி.,யில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாக்யஸ்ரீ நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாக்யஸ்ரீ, தமிழில் தேவியின் திருவிளையாடல் படத்தில் தான் அறிமுகமானார்.
தனது திரையுலக அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்ததாகவும், அப்போது உடல் கொஞ்சம் பெரிய பெண் போல் இருக்க வேண்டுமென ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், அதற்காக அப்போது போட்டுக்கொண்ட ஊசியால் தனது கர்ப்ப காலத்தின் போது பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.